தேனி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி தேனி எம்பி பங்கேற்றார் தேனி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் விழாவான சித்திரைத் திருவிழா வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவிலில் கம்பம் நடுதல் நிகழ்ச்சிகள் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பங்கேற்றார்
தேனி அருகே உள்ள வீரபாண்டியில் வருடம் தோறும் நடைபெறும் சித்திரை திருவிழா 8 நாட்கள் நடைபெறுவது வழக்கம் இந்த விழாவை காண தேனி மாவட்டம் மட்டுமில்லாமல் சென்னை மதுரை திருச்சி சேலம் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ஸ்ரீ கௌமாரியம்மனை தரிசித்து விட்டு செல்வார்கள்
இந்த ஆண்டுக்கான சித்திரை திரு விழாவையொட்டி கம்பம் நடுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது முன்னதாக செவ்வாய்க்கிழமை காலை வீரபாண்டி கிராம கோவிலில் வீட்டில் இருந்து உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு வாகனத்தில் பவனி வந்து கோவில் வந்தடைந்தார்
இதை அடுத்து முறைதாரர்களால் வெட்டிவரப்பட்ட முக்கொம்பிற்கு முல்லை ஆற்றில் மஞ்சள் நீராட்டு நடத்தப்பட்டது பின்னர் கண்ணீஸ்வரர் முடையார் திருக்கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது கௌமாரியம்மன் கோவில் வளாகத்தில் முக்கொம்பு நடப்பட்டது
இதனைத் தொடர்ந்து போடியைச் சேர்ந்த முறைதாரர்கள் அரிவாளில் ஏறி வந்து முக்கொம்பிற்கு தண்ணீர் ஊற்றினர் விழாவில் கம்பத்திற்கு 21 நாட்கள் மாவு பூஜை நடத்தப்படும் பக்தர்கள் முளை ஆற்றில் இருந்து குடிநீர் புனித நீரை எடுத்து வந்து கம்பத்தில் நீரை ஊற்றி பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவர்
கம்பம் நடுதல் முடிந்து 22 ஆம் நாளில் கோவில் திருவிழா தொடங்க உள்ளது இந்த விழா அடுத்த மாதம் மே 6ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை எட்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது
இதில் 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை விழாவின் முக்கிய அங்கமான தேர் திருவிழா வெகு விமரிச்சையாக நடைபெற உள்ளது சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் நடுதல் நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பேரூராட்சி மன்ற தலைவர்கள் வீரபாண்டி கீதா சசி பூதிப்புரம் கவியரசு பால்பாண்டியன் மேல சொக்கநாதபுரம் கண்ணன் காளி ராமசாமி மார்க்கையன் கோட்டை ஒ.ஏ. முருகன் குச்சனூர் பி.டி. ரவிச்சந்திரன் ஓடைப்பட்டி வழக்கறிஞர் தனுஷ்கோடி போடிநாயக்கனூர் ஏல விவசாயிகள் சங்க கல்லூரியின் கண்காணிப்பாளர் யுவராஜா பேரூராட்சி செயல் அலுவலர்கள் வீரபாண்டி வெ. கணேசன் மார்க்கையன்கோட்டை சிவக்குமார் குச்சனூர் முருகன் ஓடைப்பட்டி அ. சுதா ராணி கோவில் செயல் அலுவலர் நாராயணி மேலாளர் பாலசுப்பிரமணியன் கணக்கர் பழனியப்பன் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கௌமாரியம்மன் மனம் உருக தரிசித்தனர் ஏராளமான பக்தர்கள் காப்புக் கட்டி தங்களின் விரதத்தை தொடங்கினர்.