காஞ்சிபுரத்தில் பிரிம்மிங் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர், திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சி இராதாகிருஷ்ணன்
பிறந்தநாள் விழா.

காஞ்சிபுரம் ஏப்ரல் 20, ஸ்ரீ வாரி கல்வி அறக்கட்டளையின் நிறுவனரும், காஞ்சிபுரம், திருவள்ளூர் பிரிம்மிங் பள்ளி நிறுவனரும், கிரிஷ் ஹவுசிங் & ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனரும், தி.மு.க.கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளருமான சி. இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா காஞ்சிபுரம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வெள்ளகேட் பகுதியில் பிரிம்மிங் பள்ளி வளாகத்தில் கேக் வெட்டி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

முன்னதாக சி. இராதாகிருஷ்ணன்தந்தை சி. சின்னபையனிடம் ஆசி பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் கிரிஷ் ஹவுஸிங் பிராபர்ட்டீஸ் இயக்குனர்கள்
திம்மசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் புல்லட் கே.தேவேந்திரன்,
திம்மசமுத்திரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெள்ளகேட் ஜி சுந்தரம்,
வெள்ளகேட் தேவந்திரன், ஜாலி கடை டி.கோபால், கோபி, ஒப்பந்ததாரர் தேவன்,
முருகன் மற்றும் அஇஅதிமுக கட்சியின் மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம்,
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி. ஆர். மணிவண்ணன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் எஸ். மாணிக்கம், கோல்ட் ரவி, பாஜக மண்டல நிர்வாகி எஸ். ஜீவானந்தம், மக்கள் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் எஸ் பி கே சிம்பு, அசல் அருள், ஏ ஆர் எஸ் சில்க்ஸ் சிவசிதம்பரம் உள்ளிட்ட ஏராளமான காஞ்சி நகரின் முக்கிய பிரமுகர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பள்ளி ஊழியர்கள் கலந்து கொண்டு சி.இராதாகிருஷ்ணனுக்கு மாலை மற்றும் மலர் கீரிடம் அணிவித்து சால்வை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து பள்ளியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், அப்பகுதி ஏழை, எளிய மக்களுக்கும் சேலை, வேட்டி ஆகியவற்றை சி.இராதாகிருஷ்ணன் வழங்கினார்.
பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அசைவம் மற்றும் சைவ விருந்தும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சி. இராதாகிருஷ்ணன் சகோதரர்கள் சி. கல்யாண சுந்தரம், சி. தயாநிதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.