பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட, சிறுவயலூர் ஊராட்சி, பழைய விராலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த என்பவருக்கு சுரேஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு கன்றுக்குட்டிகளை தெரு நாய்கள் கடித்து உயிர் இழந்தது அந்தப் பகுதி விவசாயிகளிடம்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் கடந்த ஏப்ரல் -06 ஆம் தேதி, இதேப் பகுதியில் 2-கன்றுக்குட்டிகளை தெருநாய்கள் கடித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.ஆலத்தூர் தாலுக்காவுக்கு உட்பட்ட கிராமங்களில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.