பாபநாசம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ஈஸ்டர் பெருவிழாவை முன்னிட்டு தேர் பவனி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஈஸ்டர் பெருவிழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பங்குத்தந்தை மரிய பிரான்சிஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்று ஈஸ்டர் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மலர் அலங்காரத்தில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஜெபஸ்டியார் பேரருள காட்சியளித்து முக்கிய வீதிகள் வழியாக ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்தர்கள் தேர் தவணியை இழுத்துச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து ஜெபஸ்தியாருக்கு பூ போடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர் .