வலங்கைமான் ஒன்றியத்தில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி ஒய்வு பெற்ற ஆசியர்கள் குமரகுருபரன், நாகலட்சுமி, உமா, கிரிஜா, சுந்தர வடிவேலு, டெய்சி, சாந்தி, ஜெயந்தி, செந்தில்குமார் ஆகியோரது பணியினை பாராட்டி தமிழக ஆசிரியர் கூட்டணியின் அமைப்பின் சார்பில் வலங்கைமானில் தனியார் திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டாரத் தலைவர் சுந்தரவடிவேலு தலைமை வகித்தார்,
வட்டாரச்செயலாளர் இளங்கோவன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்டத் தலைவர் வீரமணி, மாவட்டச் செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டு ஒய்வு பெற்றவர்களை வாழ்த்தி பேருரை நிகழ்த்தினார்.
மேலும் மாநில அமைப்பின் சார்பில் மாநிலத் தலைவர் எழிலரசன், மாநில செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், முன்னாள் மாநில தலைவர் நம்பிராஜ், மாநிலத் துணைச் செயலாளர் முரளி, பொதுக்குழு உறுப்பினர் சேகர், மாநிலத் துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் இறுதியில், வட்டாரப் பொருளாளர் வேல்முருகன் நன்றியுரை கூறினார்.