திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்,
தமிழ்நாடு அரசு நியாய விலைகடை பணியாளர் சங்கம் சார்பில் தனி துறை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் செய்து திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட பொருளாளர் முருகானந்தம் தலைமையில் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் பிரதான கோரிக்கையாக ரேஷன் கடை பணியாளர்களுக்கு என தனி துறை அமைக்க வேண்டும் 100% பொது மக்களுக்கு உரிய நேரத்தில் பொருட்களை வழங்க வேண்டும் , பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் அறநூறுக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளை அடைத்து இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் செய்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்