தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா நகர் 7 சந்திப்பு பகுதியில் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக அமைச்சர் பொன்முடியை கண்டித்து, பெண்களை இழிவு படுத்திய தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தியும் திமுக அரசைக் கண்டித்தும் தூத்துக்குடி அண்ணா நகரில் மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ,மகளிர் அணியினர் கலந்து கொண்டு அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா.சுதாகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலளார் டேக் ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்பப்பிரிவு செயலாளர் அருண் ஜெபகுமார் கட்சி நிர்வாகிகள் பெருந்தலை கலந்து கொண்டனர்