தமிழ்நாடு முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில தலைவர் சக்திவேல் இக்கட்சியின் புதிய மாநில செயலாளராக சுந்தர் (எ) மீனாட்சி சுந்தரம் அவர்களை நியமனம் செய்துள்ளார்.
கோவை மாவட்டம் பா.நா.புதூர் பகுதியில் வசித்து வருபவறும் பத்திரிகையாளரு மான இவரை தமிழக முற்போக்கு மக்கள் கட்சியில் மாநில தலைவர் வழக்கறிஞர் சக்திவேல் அவர்கள் சுந்தர் அவர்களைமாநில செயலாளராக நியமனம் செய்துள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் அதன் விபரம் வருமாறு:-
தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில செயலாளராக சுந்தர் என்கிற மீனாட்சிசுந்தரத்தை நியமித்துள்ளதாகவும், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் விதிகளுக்கு கட்டுப்பட்டு அதே நேரத்தில் கட்சியின் பெயருக்கு மேலும் சிறப்பு சேர்த்திடும்
வகையில் தங்களின் பணி இருந்திட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.மேலும் இந்த பதவியில் சிறப்பாக பணியாற்றி தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் இருந்திட வேண்டுமென கேட்டுக் கொள்வதாக தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் சக்திவேல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.