காங்கயம் அடுத்துள்ள ஊதியூர் காப்பு காட்டில் வனவிலங்குகளுக்கு வனத்துறை மூலம் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டது.

இந்த மலையில் குரங்குகள், மான்கள், முள்ளம்பன்றிகள், முயல், கீரி, மயில்கள், காட்டுப்பன்றிகள் முள்எலிகள், மரநாய்கள் என ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன.

போதிய அளவில் மழை பெய்து வனம் செழிப்பாக இருக்கும் கால கட்டங்களில் மலையில் கிடைக்கும் காய், கனிகளை உண்டு வாழ்கின்றன. போதிய மழை இல்லாமல் மரங்கள் காய்ந்து கிடக்கும் சீசன்களில் அடிவாரப் பகுதியில் உள்ள குடியிருப்புகள், விவசாய தோட்டங்களுக்கு படையெடுத்து வந்துவடும். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடந்த சில தினங்களாக காங்கேயம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி வன விலங்குகளும் அவதி அடைந்து வருகின்றன. தற்போது, கோடை காலத்தில் வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேடி விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

குறிப்பாக, மான்கள், குரங்குகள் காடுகளை விட்டு வெளியேறி ஊருக்குள் வருவது தொடர்கிறது. ஊதியூர் காப்புக் காட்டில் வன விலங்குகள் தாகத்தை தீர்க்க, காங்கேயம் வனத்துறை அலுவலர்கள் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *