தூத்துக்குடி 48வது வார்டில் அதிமுக பாஜக கட்சிகள் தமிழ்நாடு மக்களுக்கு செய்த துரோக திட்டங்களை மக்களிடம் தெரிவிக்கும் வகையில் திமுக நிர்வாகிகள் நோட்டீஸ் வழங்கினர்.
திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆலோசனைப்படி,தூத்துக்குடியில் வார்டு வாரியாக பொதுமக்களுக்கு அதிமுக பாஜக செய்த துரோக திட்டங்களை எடுத்துக்காட்டும் விதமாக நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகரம் 48 வார்டு வள்ளிநாயகபுரம் பகுதியில் பிரையன்ட் நகர் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்ட செயலாளர் நவநீதன் தலைமையில், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் நிர்மல் சரவணகுமார், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, கவுன்சிலர் ராஜேந்திரன், பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப் ஆகியோர் முன்னிலையில் அதிமுக – பாஜக துரோகத்தை வெளிப்படுத்தும் வகையில் வள்ளிநாயகபுரம் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் 48 வது வட்ட பிரதிநிதி ஜேசு பாலன், 49 வது வட்ட செயலாளர் மூக்கையா, கவுன்சிலர் சரவணகுமார், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் வே.பால, ஐடி விங் பகுதி ஒருங்கிணைப்பாளர் சந்தன முனீஸ்வரன், ஐடி விங் அமைப்பாளர் குமார், பகுதி பொறியாளர் அணி லிங்கராஜா, நெசவாளர் அணி வெள்ளை பெருமாள், 48 வது வட்ட துணை செயலாளர் அனிதா ஜெயராமன், ந.ரமேஷ், வட்ட நிர்வாகிகள் ரமேஷ், லோகநாதன், முருகானந்தம், இலக்கிய அணி மாடசாமி, பகுதி நெசவாளர் அணி அமைப்பாளர் இசக்கித்துரை, பகுதி விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் மரியராஜ் உள்ளிட்ட 48வது வார்டு திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.