சென்னை மாநகராட்சியில் மண்டல அலுவலராக பணிபுரிந்த செந்தில்முருகன், மாறுதலாகி திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 4-வது ஆணையராக இவர் பொறுப்பேற்கிறார்.
பெயரளவில் மாநகராட்சி மக்களிடம் வரிப் பணம் அதிகம் பெறுவதே குறிக்கோள். அதிகார தன்மையில்லை செயல்பாடும் இல்லை. தற்போது வந்துள்ள ஆணையர் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.