கரூர் செய்தியாளர் மரியான் பாபு
இடஒதுக்கீடு கோரும் அனைத்து சமுதாயத்தினரும் சித்திரை முழு நிலவு வன்னியர் மாநாட்டில் கலந்து கொள்ளலாம் – வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி அழைப்பு
கரூர் மாவட்ட பாட்டாளி கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் கரூரில் உள்ள தனியார் தங்கும் விடுதி கூட்டரங்கில் நடைபெற்றது.
அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
சமூக நீதி, சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினருக்கும் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாம்மல்லபுரத்தில் நடைபெற இருப்பதாக தெரிவித்த அருள்மொழி, இந்த மாநாட்டில் இடஒதுக்கீடு கோரும் அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொள்ளலாம் என்றார்.
மேலும் இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில வன்னியர் சங்க செயலாளர் தங்கஅய்யாச்சாமி , கரூர் மாவட்ட தலைவர் சோ தமிழ்மணி , மாநகர செயலாளர் முருகேசன் , மாநில செயற்குழு உறுப்பினர் மருத்துவர் மணி, மகளிர் அணியைச் சேர்ந்த அஷ்ட லட்சுமி , தங்கமணி உள்ளிட்ட ஏராளமான பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.