திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்,
திருவாரூர் இந்து முன்னணி சார்பாக பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அகல் விளக்கு (மோட்ச தீபம்) ஏற்றி மலர் தூவி புஷ்பாஞ்சலி செய்து கண்டன பாடல் பாடினர்….
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 29 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்ந வகையில் திருவாரூர் கமலாலய திருக்குளம் நகராட்சி எதிரே உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயில் வாசலில் இந்து முன்னணி சார்பில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அகல் விளக்கு (மோட்ச தீபம்) ஏற்றி புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட சங்கசாலக் பாலசுப்ரமணியன்ஜி பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பேசினார்.
அதன் பிறகு இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் விக்னேஷ்ஜி கண்டன பாடல் பாடி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.பின்னர் உயிரிழந்தவர்களுக்கு அகல் விளக்கு (மோட்ச தீபம்) ஏற்றி அனைவரும் மலர் தூவி புஷ்பாஞ்சலி செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை இந்து முன்னணி நகர தலைவர் செந்தில் செய்திருந்தார்.
இதில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜசேகர்ஜி உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட இந்து முன்னணி பாஜகவினர் கலந்து கொண்டனர்.