கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக நெசவாளர் காலனியில், விலையில்லா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கோவில் வைப்பு அறையை அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்லி ஆனந்த் திறந்து வைத்தார்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், கோவையில் நாளை நடைபெற உள்ள பூத் கமிட்டி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தரவுள்ளார்.
மாநாட்டு ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக நெசவாளர் காலனியில், தமிழக வெற்றி கழகம் சார்பில் விலையில்லா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கோவில் வைப்பு அறையை புஸ்லி ஆனந்த் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாபு தலைமை வகித்தார்….
இதில், தெற்கு மாவட்ட செயலாளர் கோவை விக்னேஷ்,கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் குமார்,,கிழக்கு மாவட்ட செயலாளர் யுவராஜ்,வடக்கு புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொருளாளர் சரவணக்குமார், அஸ்வின், அக்ஷயாஸ் பிரகாஷ்,வினோத் குமார்,கௌதம்,ஞானபிரகாஷ் மற்றும் கவுதம் ஆகியோர் செய்திருந்தனர்…
நிகழ்ச்சிக்கு வந்த புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கு வழியெங்கும் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.