மணலி அருகே காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது ஏராளமான ஒரு கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
காஷ்மீர் மாநிலம் பகல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது நேற்றைய முன்தினம் பிற்பகலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
மனித உயிர்கள் மீது தீவிரவாதிகள் நடத்தி இந்த கொடூர தாக்குதல்
சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது .

இந்த அதிர்ச்சி சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் வசித்து வரும் பல்வேறு மொழி பேசும் மக்கள் மிகுந்த மனவேதனை அடைந்தனர்.இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது சென்னை மணலி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் மனோகர் ஜி அவர்கள் கலந்துகொண்டு காஷ்மீர் மாநிலம் பகல் காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு தீபம் அஞ்சலி செலுத்தி கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.

மேலும் அவர்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி தங்களது கண்டனங்களை அவர்கள் தெரிவித்தனர்அதனைத் தொடர்ந்து அங்கு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த26 பேரின் புகைப்படங்களுக்கு இந்து முன்னணி மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி தங்களது இரங்கலை தெரிவித்துக் கொண்டனர் .

அதனை தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அமைதி காக்கப்பட்டது இதனை அடுத்து இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக அகல் விளக்கு ஏந்தி அவர்கள் ஊர்வலமாக சென்று அங்குள்ள சிவன் கோயில் முன்பு அவர்கள் சிவனை வழிபட்டு அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி நிர்வாகிகள் மகளிர் அணி தொண்டர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *