புதுச்சேரி இயற்கையை நேசிக்கும் நவீன பாரம்பரியத்தின் முன்னோடியான P4U நிறுவனம், 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் “தோரணம் ஆயிரம்” என்ற பெயரில் மக்களை விழிப்புணர்விற்கு அழைக்கும் முக்கிய நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வின் மூலம், விற்பனையாளரும் வாடிக்கையாளர் இடையிலான உறவை மஞ்சப்பை எனும் பாரம்பரிய பை மூலம் இணைப்பதே நோக்கம். “இது எங்கள் கோரிக்கை அல்ல – இது எங்கள் கொள்கை!” என உறுதியாக தெரிவிக்கும் P4U நிறுவனம், நெகிழி பைகளை விட்டுப் பழமையான மஞ்சப்பையைத் தழுவுவோம் எனும் உயரிய குறிக்கோளுடன் இந்த விழாவை முன்னெடுக்கிறது.

P4U செயலி மண் சார்ந்த, மக்கள் சார்ந்த, விவசாயம் சார்ந்த தொன்மைகளை ஆவலுடன் உலகிற்கு எடுத்துச் செல்வதையே தனது பணி எனக் கருதுகிறது.
இதனடிப்படையில் நடைபெறும் “தோரணம் ஆயிரம்” நிகழ்வு, மஞ்சப்பையின் மீள்பிரவேசத்தையும், பசுமை சூழலுக்கான சாதனையையும் உலகறியச் செய்யும் சின்னமாக அமையும்.

“மீண்டும் வேண்டும் மஞ்சப்பை! நெகிழியை விடு – நம் செயலியை தொடு!” என்ற அழைப்பை முன்வைக்கும் இந்நிகழ்வுக்கு, அனைத்து சூழலியல் நலனில் ஈடுபட்டிருக்கும் பொது மக்கள், வர்த்தகர்கள் மற்றும் சமூக நல இயக்கங்கள் வரவேற்கின்றனர்.

இந்த நிகழ்வின் தொடக்கமே எதிர்கால பரிணாமத்திற்கு முதல் அடியாக அமையும் என அமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *