பாபநாசம் செய்தியாளர்
ஆர் .தீனதயாளன்
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தமிழக வெற்றிக் கழக கிழக்கு ஒன்றியம் சார்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச புடவை வழங்கும் விழா ….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழக வெற்றிக் கழக ஒன்றியம் சார்பில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச புடவை வழங்கும் விழா மத்திய மாவட்ட பொறுப்பாளர் விஜய் சரவணன் வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம் ஆலோசனையின்படி பாபநாசம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வர்த்தக அணி அமைப்பாளர் பிலாலுதின், நகரச் செயலாளர் உதயசூரியா, ஒன்றிய இணைச் செயலாளர் லெனின்,நகர இணை செயலாளர் கரிகாலன், பாவை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தீனா , தமிழக வெற்றி கழக கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.