திருவள்ளூர்
அயநல்லூர் ஊராட்சியில் உள்ள விநாயகர் ஆலயம், துலுக்காணத்தம்மன் ஆலயம் அஷ்டபந்தனை மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது அயநல்லூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ் பெற்ற சக்தி வாய்ந்த ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மற்றும் ஸ்ரீ துலுக்காணத்தம்மன் ஆலயம் உள்ளது.இந்த ஆலயம் தற்போது கிராம பொதுமக்கள் நிதி உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு கடந்த இரு தினங்களாக பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று நேற்று காலை எட்டு மணியளவில் புனராவர்த்தன ஜீர்ணோத்தார அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி எம் எல் ஏ டி ஜே கோவிந்தராஜன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கி வே ஆனந்தகுமார்,ஒன்றிய கவுன்சிலர் ஜோதி, உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளான சீனிவாசன்,தக்ஷிணாமூர்த்தி, சிவா, சாரதி, நாகலிங்கம், மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். முடிவில் பக்தர்களுக்கு சுவாமி கலசங்கள், குங்கும தீர்த்த பிரசாதங்கள், அன்னதானம், வழங்கப்பட்டது. இதனையடுத்து இரவு கரகாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.