கோவை க.க.சாவடி,காமராஜபுரம் அருள்மிகு ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கோவை க.க.சாவடி,காமராஜபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது…
சாவடி பாலு,பூவாத்தாள்,துளசிமணிபாபு,,தங்கமணி,ராதா,,பாபு பூசாரி
சரஸ்வதி,ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில்,சிவ ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் கும்பாபிஷேக விழாவை முன்னின்று நடத்தினார்..
சிறப்பு விருந்தினராக கோவில் தர்மகர்த்தா மருதமுத்து செட்டியார் கலந்து கொண்டார்..
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கணபதி ஹோமத்துடன் துவங்கிய இந்த யாக பூஜையின் போது வாஸ்து ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபுர கலச ஹோமம், பூர்ணாதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாக கால பூஜைகளும் நடைப்பெற்றது,
பின்னர் புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட கும்ப கலசங்கள் மேள தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது..
தொடர்ந்து பொதுமக்களுக்கு தீர்த்த பிரசாதமும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரப் பூஜைகளும் கற்பூர தீபாதனைகளும் நடைப்பெற்றது.தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது..விழாவின் ஒரு பகுதியாக இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது..
விழாவில் ஆர்பிஎஸ் முருகேசன், கவுன்சிலர் நாகராஜன், தங்கவேல், வேலுச்சாமி நாட்டாமை, முருகேசன், துரைராஜ், முருகன், ரவி ,பழனியம்மாள், பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்