தாராபுரம் அருகே சாலை விபத்தில் கணவன் மனைவி பலி மகள் படுகாயம்
விபத்து குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

காயம் அடைந்த மாணவிக்கு தலா ஒரு லட்சம் மற்றும் மருத்துவச் செலவு முழுவதும் அரசே ஏற்றுக் கொள்வதாக ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சூரியநல்லூர் அருகே உள்ள சேர்வகாரன் பாளையத்தை சேர்ந்த குழந்தான் என்பவரது மகன் நாகராஜ் (43) கூலி தொழிலாளி. இவர் தனது மனைவி ஆனந்தி (38), மற்றும் மகள் தீக்‌ஷயா (12) ஆகியோருடன் திருநள்ளாறு கோவிலுக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ளார். அதனை முடித்துக் கொண்டு நேற்று இரவு தாராபுரத்தில் இருந்து தனது மனைவி மற்றும் மகளுடன் அவரது மோட்டர் பைக்கில் சேர்வகாரன் பாளையத்திற்கு சென்றுள்ளார்.தாராபுரம் – காங்கயம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது இருட்டில் தடுமாறி குள்ளாய்பாளையம் பகுதியில் பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் மோட்டார் பைக் விழுந்து உள்ளது.

அதில் நாகராஜ் மற்றும் ஆனந்தி பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.தீக்‌ஷயாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அறிந்த குண்டடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் 3- பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயமடைந்த தீக்‌ஷயாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நாகராஜ் மற்றும் ஆனந்தி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.


அதனை அறிந்த நாகராஜின் உறவினர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். விபத்தில் இறந்தவர்களின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. விபத்து குறித்து அறிந்த திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார் .அப்போது விபத்தில் இறந்த இரண்டு பேருக்கும் தலா ரூ. 3 லட்சமும், காயமடைந்த தீக்‌ஷயாவிற்கு ரூ ஒரு லட்சமும் நிவாரணத் தொகை மற்றும் அவரது முழு சிகிச்சைக்கான தொகையும் அரசு ஏற்றுக்கொள்ளும் என முதலமைச்சர் உத்தரவின் பேரில் கலெக்டர் தெரிவித்தார்.
பின்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரீஸ் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *