திருவள்ளூர்
பொன்னேரி தொகுதி அகரம் ஊராட்சி தேவம்பட்டு கிராம தேவதை இளையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அகரம் ஊராட்சி இந்த ஊராட்சி உள்ள தேவம்பட்டு பகுதியில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த சக்தி வாய்ந்த அருள்மிகு கிராம தேவதை ஸ்ரீ இளையம்மன் ஆலயம் உள்ளது
இந்த ஆலயத்தில் உள்ள ஸ்ரீவாரஹி,ஸ்ரீ மகேஸ்வரி, ஸ்ரீ வைஷ்னவி, ஸ்ரீ பிரம்மி ஸ்ரீ துர்கை ஸ்ரீ சப்த கன்னி ஆகிய பரிவார தேவதைகளுக்கு ஜீர்னோத்தாரன அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த இரு தினங்களாக பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று
காலை 9 15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ வுமான சிறுனியம் பி பலராமன், பண்பாக்கம் கோளூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வங்கி செயலாளர் திருப்பதி, தேவன்பட்டு ஆசிரியர் க. உதயகுமார், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
பின்னர் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் முக்கிய பிரமுகர்களுக்கு மாலை அணிவித்து சுவாமி கலசங்கள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேவன் பட்டு கிராம பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்