திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவப்படிப்பு (NEET) சேர்க்கை நுழைவுத்தேர்வுக்காக 7 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, சின்னாளப்பட்டி தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 360 தேர்வர்களும், காந்திகிராம் பிஎம்ஸ்ரீ கேந்திராவித்யாலயா பள்ளி தேர்வு மையத்தில் 480 தேர்வர்களும், காந்திகிராம் ஊரக பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 தேர்வு மையங்களில் குருதேவ் அகாடமிக் வளாகத்தில் 263 தேர்வர்களும், தாகூர் வளாகத்தில் 480 தேர்வர்களும், நத்தம், N.கோவில்பட்டி துரைகமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 480 தேர்வர்களும், திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 480 தேர்வர்களும், திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் 480 தேர்வர்களும் என ஆக மொத்தம் 3023 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.