குடவாசல் அருகே தேதியூர் ஸ்ரீ சுந்தர கனகாம்பிகா சமேத ஸ்ரீ பிரக்தியக்ஷ பரமேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்..”ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..
இராமாயணத்தில் இராவணன் சீதையை அபகரித்து சென்ற பொழுது ஜடாயு சண்டையிட்டு இராவணனுடைய தேர் பூமியில் தகர்க்கப்பட்ட இந்த இடம் தேர்தகையூர் என்று அழைக்கப்பட்டு.. இது நாளடைவில் தேதியூர் என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறது..
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே புராதனமான தேதியூர் கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ சுந்தர கனகாம்பிகா சமேத அருள்மிகு பிரத்யக்ஷ பரமேஸ்வரர் சுவாமி திருக்கோவில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன சமர்ப்பண மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது..
ஆலயத்திற்கு 14 வருடங்களுக்கு முன் கடந்த 2011 ஆம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.. அதனை தொடர்ந்து, விநாயகர், முருகன், காலபைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகள் கடந்த வருடம் 2014ஆம் வருடம் பாலாலயம் செய்யப்பட்டு.. தொடர்ந்து ஆலயம் புனரமைக்கப்பட்டது..
மேலும், இன்று நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு…
கடந்த 30.05.2025 அன்று எஜமான சங்கல்பம், பிராமண அனுக்ஞை, புண்யா கவசனம், தேவதா அனுக்ஞை பூஜைகள் நடைபெற்றது..
தொடர்ந்து யாகசாலை அமைக்கப்பட்டு.. யாகசாலையில் கடந்த 01.05.25 காலை கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, தன பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நான்கு காலம் யாக பூஜைகள் நடைபெற்றது..
இன்று காலை நடைபெற்ற நான்காம் கால யாக பூஜையில்.. பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றதை தொடர்ந்து யாக சாலையிலிருந்து… கைலாச சிவ வாத்தியங்களுடன் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு திரு கோவிலை வலம வந்து அனைத்து விமானங்களுக்கும் சென்றடைந்தது..
தொடர்ந்து சரியாக 9.30 மணி அளவில் மூலஸ்தான விமானங்கள் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத… கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பிறகு மூலஸ்தானத்தில் மகாபிஷேகம் மற்றும் மகாதீப ஆராதனை நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில்.. டெல்லி, சென்னை, பெங்களூர், பாம்பே உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்து சுவாமி தரிசனம் செய்தனர்..
தொடர்ந்து இன்று இரவு இறைவனுக்கும் இறைவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.