வங்கிகள் பணம் அனுப்புதல்/ பெறுதல் மோசடி மும்பை தமிழ் பெண்களிடத்தில் நடந்த மோசடி

வங்கி மோசடி என்பது, வங்கியைப் பயன்படுத்தி ஏமாற்றும் செயல்களாகும். இது பல வகைகளில் நிகழலாம், உதாரணமாக, message மோசடி, Email மின்னஞ்சல் மோசடி, ஆன்லைன் பேங்கிங் மோசடி, போலியான அழைப்புகள், மற்றும் உதவி கேட்டு – பணம் அனுப்புதல் மோசடி, லாபகரமான முதலீடுகள் மோசடி, லாட்டரி அல்லது ஜாக்பாட் மோசடி, சிறப்பு தள்ளுபடி சலுகைகள் மோசடி , கியூ ஆர்கோடு மோசடி, கல்வி உதவி தொகை மோசடி, ஒரு இடத்துக்கு அழைத்து சென்று மிரட்டி மொபைல், பர்ஸ் , பணம் அனுப்பி, திருப்பி அனுப்ப சொல்லி பணத்தை பறிக்கும் மோசடி ,வங்கி டெபிட் கார்டு பறித்து மோசடி ,லாட்டரி மோசடி, ரிவார்டு பெற்று தருவதாக மோசடி, செல்போன் டவர் அமைக்க பணம் தருவதாக மோசடி ஆள்மாறாட்டம் மோசடி, நட்பு மோசடி போன்றவை

மும்பை தமிழ் பெண்களிடத்தில் நடந்த மோசடி

மும்பை தமிழ் பெண்களிடத்தில் அறிமுகமான ஒரு தமிழ் பெண் மூலம் கடந்த சில
மாதங்களுக்கு முன்பு தமிழ் பெண்களிடம் எங்கள் உறவினருக்கு திருமணம் நடக்கிறது .
உங்கள் வங்கி கணக்குக்கு எனக்கு தெரிந்தவர்கள் பணம் அனுப்புவார்கள் , பணம் வரும் அதை cheque மூலம் cash ஆக withdrawal செய்து தந்தால் தொகைக்கு ஏற்ப உங்களுக்கு 4 ஆயிரம் தருகிறோம் என தமிழ் பெண்களின் ஏழ்மை மற்றும் பணம் தேவை நெருக்கடியை அறிந்து ஆசைவார்த்தை கூறி பணம் பெற்றுள்ளார்.

இது பல பெண்களுக்கு பல்வேறு கணக்கில் இருந்து பணத்தை அனுப்பி பெற்றுள்ளனர். இது தொடர்ந்து நடந்து வருவதாக அறியப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு ஒரு சிலரின் கணக்கு முடக்கப்பட்டு, cyber crime துறையில் இருந்து கடிதம் வந்துள்ளது. பின்னர் இதில் பணம் வந்த அனைத்து பெண்கள் வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது பல்வேறு பெண்கள் சிக்கலில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

வங்கி கணக்கு உள்ள வங்கி மேலாளரை சந்தித்து நடந்த சம்பவத்தையும் சொல்லி வங்கி கணக்கு முடக்கப்பட்டதை பெண்கள் நீக்க சொல்லியுளனர். மேலாளரோ புகார் வந்த அடிப்படையில் மற்றும் திடீர்னு 5 லட்சம், 10 லட்சம் னு பெரிய தொகை உங்கள் வங்கி கணக்குக்கு வந்ததால் கணக்கை கண்காணித்து வரும் வங்கி தலைமையகம் முடங்கியுள்ளது.

நீங்கள் தெரியாத நபரிடம் பணத்தை பெற்றது தவறு என்றும் நீங்க வங்கி தலைமையகம் மற்றும் cyber crime துறையை தொடர்புக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்கள்.

இதில் பல பெண்கள் தங்கள் பணம் நெருக்கடிக்காக நகையை வங்கியில் அடமானம் வைத்துள்ளார்கள் அந்த நகையை ஆண்டுக்கு ஒருமுறை Renewal செய்ய வேண்டும் Renewal காலமும் நெருங்கியுள்ளது. பணம் நெருக்கடிக்காக சிக்கலில் மாட்டிக்கொண்டதுடன், நகை ஏலத்துக்கு போய்விடுமோ ?வீட்டில் உள்ளவர்கள் அக்கபக்கம் உறவினர் னு தெரிந்தால் என்னாகுமோ ? என்ன சொல்வார்களோ ? என இந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீள்வது னு தெரியாமல் தவிக்கிறார்கள்.

இந்த சம்பவத்தை அறிந்து, வங்கி தலைமை அலுவலகத்தில் உயர் பதவிகளில் இருபவர்களிடத்திலும், cyber crime துறையில் உள்ளவர்களிடத்திலும் கேட்டபோது இந்த சம்பவம் சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் பெரிதாக பின்பலமில்லாத கல்லூரி மாணவர்கள்,இளைஞர்கள், ஏழை எளிய பெண்கள் , ஏஜென்ட்கள் , னு குறிவைத்து பணம் அனுப்பி, பணம் பெறும் மோசடி நடந்துள்ளது. இந்த பணம் மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் கும்பல், தாங்கள் மிரட்டி பணம் பறிக்கும்போது, அந்த பணத்தை அவர்கள் கணக்கில் நேரடியாக வரவு வைத்தால் போலீஸாரிடம் மாட்டிக் கொள்வோம் என்பதால் வெவ்வேறு கணக்குகளில் அனுப்பி உடனே cash ஆக பெறுவது, பணத்தைப் பெற்று அதை பின்பு தங்கள் கணக்குக்கு மாற்றிக் கொள்கின்றனர். பல்வேறு வங்கி மோசடி மூலம் கிடைத்த பணத்தை கருப்பு பணத்தை வெள்ளையாகும் செயலாக நடந்துவருகிறது அனுப்பியவர்கள் வங்கி மோசடிக்காரராக தீவிரவாத செயல் கூலி படைச்செயலில் ஈடுபடுபவராக இருக்கலாம். மக்கள் அறியாமையால்பணம் நெருக்கடியை பயன்ப்படுத்தி இந்த மோசடி நடக்கிறது. இந்த முடக்கப்பட்ட வங்கிக்கணக்கை நிரந்தரமாக பயன்ப்படுத்தாமல் இருப்பதுடன், சைபர் க்ரைம் போலீஸில் அணுகி புகார் அளிப்பது சிக்கலில் இருந்து தற்காலிகமாக விடுபட முடியும் என தெரிவித்துள்ளார்கள். ஆகையால் மக்களை வங்கி மோசடி குறித்த விழிப்புணர்வுடன் இருப்பதுடன் , பாதுகாப்பாக இருக்க மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

பாதுகாப்பாக இருக்க:

வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் உங்களை ஒருபோதும் உங்கள் தனிப்பட்ட விவரங்களை உரை செய்தி, மின்னஞ்சல், அல்லது போன் மூலம் கேட்காது என்பதை நினைவில் கொள்ளவும்.
சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம்.

தனிப்பட்ட விவரங்களை யாரும் கேட்கும் போது, வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கவும்.
வங்கி மோசடி நடந்தால், உடனே உங்கள் வங்கியை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும்.

1930 என்ற தேசிய சைபர் கிரைம் எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை பதிவு செய்தால் மோசடி செய்து பெறப்பட்ட பணத்தினை சம்பந்தப்பட்ட வங்கி கணக்கினை முடக்கி யாரும் எடுக்காதவாறு கடும் நடவடிக்கை எடுத்துவிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *