தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் :அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குள்ளாய் பாளையம் பகுதியில் நடைபெற்று வந்த சாலை விரிவாக்க பணியில் முறையான பாதுகாப்பு வசதிகள் பின்பற்றப்படாத நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தனர் இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உயிரிழந்தவர்கள் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்
பின்னர் விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் விரைந்து சாலை விரிவாக்க பணிகளை முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதில் வருவாய் கோட்டாட்சியர் ஃபிலிக்ஸ் ராஜா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.