மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26-பேர் பரிதாபமாக உயிரிழந்ததை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக கட்சியின் சார்பாக மதுரை நகர் மாவட்டம் சார்பாக பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளை கண்டித்தும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் முன்னால் பாஜக -மத்திய மந்திரியும், மாநில தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்த பொன். இராதாகிருஷ்ணன்.ஜி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக கட்சியின் முன்னால் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், இன்னாள் மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி,மாவட்ட பொதுச்செயலாளர் டி.எம்.பாலகிருஷ்ணன்,மாவட்ட செயலாளர் ரமேஷ் கண்ணன், பரவை மண்டல சார்பாக தலைவர் கார்த்திக், மாவட்ட விவசாய அணி தலைவர் துரை பாஸ்கர்,மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் அழகர் ராஜா,மண்டல பொதுச்செயலாளர் ஆர்.இருளப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஜோதி நாயகம்,அழகு சுந்தரம் மற்று ஆயிரத்துக்கு மேற்பட்ட மாநில மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் சுமார் 2- மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பயங்கரவாத தாக்குதலுக்கு எந்த விதமான கண்டனமோ, இரங்கலோ தெரிவிக்காததை கண்டித்து கோசங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியே பரபரப்புக்கு உள்ளானது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர்கள். 2026-ம் ஆண்டு நிச்சயமாக திமுக கூட்டணியை ஆட்சியை தோற்கடித்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி. நிச்சயம் வெற்றி பெற்று தமிழகத்தை ஆளும் நிலை வரும் அப்பொழுது அதற்கான விலையை இண்டி கூட்டணி கொடுக்க வேண்டியது இருக்கும்..என்று பல கருத்துக்களை தெரிவித்து. பாஜக நிர்வாகிகள் பேசியது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:
A. ராஜபாண்டியன் மதுரை.