கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.சுப்பையா மீனாட்சியம்மாள் மெட்ரிக் பள்ளி ப்ளஸ் டூ பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று அசத்தல்
தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்று முடிந்த பிளஸ் 2 பொது தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
கடந்த ஆண்டை விட அதிகமாக நடப்பாண்டில் 95.03 விழுக்காடு மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள வி.சி. சுப்பையா மீனாட்சியம்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நடந்து முடிந்த 2024-2025 கல்வி ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத வெற்றி பெற்று கவனத்தை ஈர்த்துள்ளனர்..
இதனை தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்த அறிவியல் பாடப்பிரிவை சேர்ந்த மாணவன் சபரி சுகேஷ்க்கும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பள்ளியின் தாளாளர் ஹெரால்டு ஷாம் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.