அலங்காநல்லூர்

சோழவந்தானில் கமல் நடித்து மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என பேசினார் இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி அந்த மாநிலத்தில் அரசியல் கட்சியினர் முதல் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர் மேலும் கமல் மன்னிப்பு கேட்கும் வரை கர்நாடகாவில்
தக் லைப் திரைப்படத்தை திரையிட விடமாட்டோம் என தெரிவித்தனர்

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கமலுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யத்தினர் சுவரொட்டியை ஒட்டி ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர் சோழவந்தான் மாவட்ட செயலாளர் மெடிக்கல் ரமேஷ், மாவட்டத் துணைச் செயலாளர் விமல்ராஜ், மாவட்ட பொருளாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் ரவி, ஆகியோர் பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் உலகறிந்த உண்மையை சொன்னார் இருவருக்கும் உள்ள உறவை சொன்னார் என்றும் அன்பை சொன்னதற்கு மன்னிப்பா? சத்தியம் தலை வணங்காது என குறிப்பிட்டுள்ளது அலங்காநல்லூர் பகுதியில் ஒட்டப்பட்ட நோட்டீஸால் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பு வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *