கோவையில் உள்ள சில்க் வில்லேஜ் கைத்தறி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கல்லூரி மாணவிகளுக்கான சிறப்பு கைத்தறி பயிற்சி வகுப்புகள் துவக்கம்
கோவை இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் சில்க் வில்லேஜ் கைத்தறி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக கல்லூரி மாணவிகளுக்கான சிறப்பு கைத்தறி பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டது முன்னதாக இதற்கான துவக்க விழா, சில்க் வில்லேஜ் நிறுவனத்தின் நிறுவனர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது..
இதில்,சிறப்பு விருந்தினர்களாக ஐவுளி மற்றும் ஆடை உற்பத்தி துறையின் தலைவர் பெரியசாமி,வழக்கறிஞர் கலாம் விஜயன்,கே.சி.டி.பிசினஸ் ஸ்கூல் பேராசிரியை பூங்கொடி,அவினாசிலிங்கம் கல்லூரியின் ஜவுளி மற்றும் ஆடைகள் துறை தலைவர் யமுனா தேவி,குமரகுரு கல்லூரி ஆடை வடிவமைப்பு துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன்,ஆகியோர் கலந்து கொண்டனர்..
இந்த பயிற்சியில் அவினாசிலிங்கம் கல்லூரியை சேர்ந்த துறை சார்ந்த மாணவியர்கள் பங்கேற்றனர் இதில் மாணவிகளுக்கு கைத்தறி நெசவு செய்யும் முறை குறித்தும்,அதில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்தும் கூறப்பட்டது..
முன்னதாக கைத்தறி நெசவு தொழில் துறை குறித்து சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில்,தற்போது உலக அளவில் கைத்தறி துணிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும்,குறிப்பாக மேலை நாடுகளில் ஆடைகள் சார்ந்த இறக்குமதியில் இயற்கை சார்ந்த உற்பத்தி பொருட்கள் ஆய்வில் கைத்தறி துணிகள் நல்ல வாய்ப்புகளை பெற்று வருவதாக தெரிவித்தனர்..