மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உத்ஸவத்தையொட்டி, புது மண்டபத்துக்கு எழுந்தருளிய சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்றன.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவம் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. வருகிற 9-ம் தேதி வரை விழா நடைபெறும் இந்த விழாவையொட்டி, சுவாமி, அம் மன் தினசரி மாலை 6 மணிக்கு கோயிலிலிருந்து பஞ்சமூர்த்திக ளுடன் புறப்பாடாகி, புதுமண் டபம் சென்று அங்கு பத்தியு லாத்துதல், தீபாராதனை முடிந்த பின்னர் மீண்டும் கோயிலுக்கு வந்தடைவர்.

இந்த நிலையில், வைகாசி வசந்த உத்ஸவத்தின் ஐந்தாம் நாளான நேற்று சுவாமி, அம்மன் கோயிலிலிருந்து புறப்பாடாகி புது மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு அபிஷே கம், தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து, இரவு8மணிக்கு புது மண்டபத்திலிருந்து மண்டபத்திலிருந்து புறப்பாடாகி, நான்கு சித்திரை வீதிகளில் அம்மன், பிரியாவிடையுடன் சுவாமி வீதி உலா சென்று கோயிலைச் சென்றடைந்தனர்.புது மண்டபம், நான்கு சித்திரை வீதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *