கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில்பாலாஜி மாயனூர் கதவணையில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரி , குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவிராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.