திருவொற்றியூரில் வீடு புகுந்து 19 வயது இளைஞரை மர்ம நபர்கள் வெட்டியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக, ஐந்து பேரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (19) என்ற இளைஞர்.தாய் ஜெயா கடைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த போது திடீரென வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர்.
இதில் ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கடைக்கு சென்று வீடு திரும்பிய பார்த்த போது ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த ஆகாஷின் உடலை பார்த்து அவரது தாய் ஜெயா திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தெரிவித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஆகாஷின் சடலத்தை உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை தொடர்பாக, ஐந்து பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், வழக்கு ஒன்றில் சிக்க வைத்ததால், ஆகாஷின் நண்பர்களே கொலை செய்திருக்கிலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.