திருவொற்றியூர் மணலி சிபிசிஎல் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டத்தின் போது நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சங்கர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் இந்நிகழ்ச்சியில் இயக்குனர் கண்ணன் கமாண்டன்ட் தேவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருவொற்றியூர் ராம்கி சென்னை என்விரோ சொல்யூஷன் நிறுவனம் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினத்தில் மண்டல குழு தலைவர் தனியரசு மண்டல அலுவலர் விஜயபாபு செயற்பொறியாளர் பாபு, பாண்டியன் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
அதேபோல் மணலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் ஏ வி ஆறுமுகம் மண்டல அலுவலர் கருணாகரன் செயற்பொறியாளர் தேவேந்திரன் பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்