பிரபல முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் அமைதியின் சிகரம் கே. எம் . சிராஜுதீன் அவர்களின் பிறந்தநாள் விழா சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மினி ஹால் மன்றத்தில் நடைபெற்றது.

முனைவர் நவீன் ஆர்ட்ஸ் ஆர் . பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் பிரபல மருத்துவமனையின் நிர்வாகியுமான ஸ்ரீமான் டாக்டர். ஹண்டே காவல் உதவி ஆணையாளர் ஓய்வு பெற்ற கே. ராஜாராம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் பூவிலங்கு மோகன் , அப்துல் மாலிக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிராஜுதீன் அவர்களை வாழ்த்தி பேசினார்கள்..

முதலாவதாக பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நீளமான கேக் வெட்டப்பட்டது . பின்னர் பத்திரிக்கையாளர்கள் நாட்டின் முதுகெலும்பாக உள்ளவர்கள் அவர்கள்படும் இன்னல்கள் பற்றி டாக்டர் ஹண்டே எடுத்துரைத்தார்.

எஸ். பி .கோவலன் விஜயன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்வில், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அனீஸ், ரமேஷ், கணேசன், சங்கீத் ஐயர், சிவாஜி ராவ் ,வராகி பிரகாஷ் ,ரேஷ்மா பர்வீன், கஜேந்திரன் , கொள்கை பரப்புச் செயலாளர் ஹமீதா உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். பின்னர் டிவி புகழ் மோகனா ரிதம்ஸ் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

இறுதியாக பீர்முகமது, புறையூர் ரஹீம் ஆகியோர் நன்றியுரை ஆற்றினார்கள் இதில் வழக்கறிஞர்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *