தேனி மாவட்டத்திற்கு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் ஆய்வு தேனி மாவட்டத்திற்கு தமிழக சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் 2024.2026 தலைவர் ஏ பி நந்தகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கே சீனிவாசன் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கும்பகோணம் க. அன்பழகன் கோவில்பட்டி கடம்பூர் ராஜு செங்கம் மு.பெ.கிரி பாப்பிரெட்டிப்பட்டி ஆ. கோவிந்தசாமி மயிலாப்பூர் த. வேலு மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆண்டிபட்டி ஆ. மகாராஜன் பெரிய குளம் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்டத்தில் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்
முதலாவதாக ஆண்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தேவையான சீரான மின் விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி ரூபாய் 263.28 லட்சம் மதிப்பீட்டில் மின்மாற்றி யின் திறன் 10 MVA யிலிருந்து 15 MVA ஆக உயர்த்தப்பட்டதன் பயன்பாடுகள் குறித்து மின்வாரிய அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து பெரிய குளம் டாடா காப்பி ஆலையில் டாட்டா காப்பி பேக்டரி செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர் மேலும் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை இயந்திரத்தின் மூலம் மறுசுழற்சி effuiement treatment process செய்து மீண்டும் பயன்படுத்தும் முறை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் . மேலும் உள்ளாட்சி அமைப்புகள் நியாய விலைக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர் சிவபிரசாத் மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி பெரிய குளம் சார் ஆட்சியர் ரஜத்பீடன் மின்சார வாரியம் மேற்பார் வை பொறியாளர் லட்சுமி செயற்பொறியாளர் நிர்வாக அலுவலர் ரங்கநாதன் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் பாலமுருகன் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுகுமார் தாட்கோ மேலாளர் சரளா மாவட்டத் தொழில் மையம் புது மேலாளர் கணேசன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் காமாட்சி நகராட்சி நகர் மன்ற தலைவர்கள் தேனி ரேணுப் பிரியா பாலமுருகன் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர் கம்பம் வனிதா நெப்போலியன் கூடலூர் பத்மாவதி லோகந்துரை பேரூராட்சி மன்றத் தலைவர்கள் பூதிப்புரம் கவியரசு பால்பாண்டியன் மார்க்கையன்கோட்டை ஓ ஏ முருகன் குச்சனூர் பிடி ரவிச்சந்திரன் மேல சொக்கநாதபுரம் கண்ணன் காளி ராமசாமி தாமரைக்குளம் ச. பால்பாண்டி தென்கரை வி நாகராஜ் வடுகபட்டி நடேசன் ஓடைப்பட்டி வழக்கறிஞர் தனுஷ்கோடி வீரபாண்டி கீதா சசி கம்பம் புதுப்பட்டி சுந்தரி பாஸ்கரன் உள்பட நகராட்சி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.