செய்தியாளர் வெங்கடேசன்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றிய பனப்பாக்கம் பேரூராட்சி அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு கடிதம் அனுப்பி வைத்து அனுமதி பெற்று தலைவர் கவிதா சீனிவாசன் நேற்று ரூ 1.81லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை 2025-26 நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் அமைக்கும் பணிக்கு குத்து விளக்கு ஏற்றி பூமிபூஜை நடைபெற்றது.

இந்த அடிக்கல் நாட்டு பணிக்கு நேற்று காணொளி மூலம் அடிக்கல் பணியினை தொடங்கி வைத்தார் இந்த பணியினை தொடர்ந்து பேரூராட்சி மன்ற தலைவர் கவிதாசீனிவாசன் செயல் அலுவலர் ஏழிலரசி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள் மேலும் இந்த நிகழ்வில் துணைத் தலைவர் மயூரநாதன் இளநிலை பொறியாளர் மணிமுடியன் அலுவலர் லோகநாதன் துப்புரவு மேற்பார்வையாளர் பிரவீன்குமார் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் குலோத்துங்கன், சாரதி துப்புரவு பணியாளர்கள் பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சால்வை அணிவித்து கௌரவப்படுத்தி இனிப்பு வழங்கி பணப்பாக்கம் பேரூர் திமு கழக செயலாளர் என்ஆர், சீனிவாசன்.நன்றி தெரிவித்தார்.