புதுச்சேரி முத்தியால்பேட்டை நியூ 5 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற பெத்தாங்கு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்

புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை தொகுதி நியூ 5 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய மாநில அளவிலான பெத்தாங்கு விளையாட்டு போட்டி முத்தியால்பேட்டை நியூ மாடர்ன் வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சமூக சேவகர் பிரபாகரன் அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நியூ மாடர்ன் வித்யா மந்திரி பள்ளி முதல்வர் கஸ்தூரி மற்றும் புதுச்சேரிமாநில இளைஞரணி துணை அமைப்பாளர் உத்தமன் மற்றும் நியூ 5 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் கேப்டன் நாகராஜ்,மோகன் மற்றும் நியூ 5 ஸ்டார் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.