செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு படையினரின்
ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆச்சிறுப்பாக மாறுவார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சமூக விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நேற்று காலை 9.30 மணியிலிருந்து பிற்பகல் 11.00 மணிவரை நடைபெற்றது.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் மதுராந்தகம் தாசில்தார் கணேசன் தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியர் எம்.ஜெ.விஜயகுமார் உதவி தலைமை ஆசிரியர் ஜெ.பரமேஸ்வரி
எ.ஜெயமுருகன் எம்.முனியாண்டி அச்சிறுப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் நவீன்குமார்
ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அரக்கோணம் 4-வது பெட்டாலியன் சப் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் பேரிடர் என்றால் என்ன? அதன் வகைகள் மற்றும் விளைவுகள், தேசிய பேரிடர் மீட்பு படையின் பங்கு மற்றும் பொறுப்புகள்,
முதன் முதல் சிகிச்சை பற்றிய திறன் மேம்பாடு, தூக்கி செல்லும் முறைகள்,
இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் முறை, செயற்கை சுவாசம் உணவுக்குழாய் தடுக்கும் நிலை, தற்காலிக தூக்கிக் கொண்டு செல்லும் கருவிகள்,
தற்காலிக மிதக்கும் கருவிகள், நிலநடுக்கம் முன், நடுவில், பின்னர் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், மௌசம்,சச்சேத், தமினி, பூகம்பம்
போன்ற செயலிகளின் பயன்கள்,தீவிபத்து பாதுகாப்பு,வெள்ள மீட்பு, மற்றும் பேரிடர்
காலங்களில் பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் திறனை வளர்த்துவைக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.