தேனி மாவட்டம் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 2773 வழக்குகளுக்கு உடனடி தீர்வு தேனி மாவட்டம் பெரியகுளம் ஆண்டிபட்டி உத்தமபாளையம் கொடி நாயக்கனூர் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் தேனி மாவட்ட நீதிமன்றத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் லோக் அதாலத் நடைபெற்றது
தேனி மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் தலைமை வகித்தார். இதில் மோட்டார் வாகன விபத்தில் இழப்பீடு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் சொத்து மற்றும் பணம் சம்பந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள் சமாதானம் செய்யக்கூடிய குற்ற வழக்குகள் ஜீவனாம்சம் நில ஆக்கிரமிப்பு வழக்குகள் தொழிலாளர் நலன் இழப்பீடு வழக்குகள் கல்வி கட ன் வங்கி கடன் சம்பந்தமான வழக்குகள் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் போன்றவை பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது
மேலும் ஒரு இன்டெல் இன்சூரன்ஸ் கம்பெனியின் வாகன விபத்துக்கான இழப்பீட்டுத் தொகை 1.2500.க்கான காசோலையினை முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ நடராஜன் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு வழங்கினார்
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் மற்றும் வங்கிகளின் வராக்கடன்கள் என மொத்தம் 2773 வழக்குகளுக்கு 9 கோடியே 31 லட்சத்து 29 ஆயிரத்து 979 க்கு மதிப்பில் தீர்வு காணப்பட்டுள்ளது
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் சார்பு நீதிபதி மகேஸ்வரி அமர்வு நீதிபதி கணேசன் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணக்குமார் சார்பு நீதிபதிகள் கீதா சந்திரசேகர் சிவாஜி செல்லையா சையது சுலைமான் உசேன் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள் அலெக்ஸ் ராஜ் ரகுநாத் ராஜசேகர் சுகந்தன் முகமது ஹாசிம் நீதித்துறை நடுவர்கள் ஜெயமணி ஆசை மருது ஜெயபாரதி கமலநாதன் காமராசு அமலானந்த கமலக்கண்ணன் பாசில் முகமது நல்ல கண்ணன் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்