பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சுதா பிறந்தநாளை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் வடக்கு மாவட்ட பாபநாசம் நகர காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினர்…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சுதா பிறந்தநாளை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் தஞ்சை வடக்கு மாவட்ட பாபநாசம் நகரம் சார்பில் பாபநாசம் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நகரத் தலைவர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் நகர தலைவர் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினர்.