போடி புறநகர் பகுதியான சாலைக் காளியம்மன் கோவிலில் இருந்து திருமலாபுரம் நோக்கி செல்லும் புற வழிச்சாலை வலது புறம் கால்வாய் பாய்ந்து ஓடுகிறது, இந்த கால்வாயை கடந்து செல்லும் பாலங்களில் ஒரு புறம் தடுப்பு சுவர் இல்லாத நிலையில் பாதுகாப்பற்ற தாக உள்ளது,
இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் இப்பகுதி மூலம் திருமலாபுரம், சொக்கநாத புரம், வஉசி தெரு போன்ற பகுதிகளுக்கு செல்ல அதிக அளவில் சென்று வருகின்றனர், எனவே போடி நகராட்சி மூலம் கால்வாயின் இரு மருங்கிலும் தடுப்புச் சுவர் கட்ட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்…
மு. முத்துக்குமார்
டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு
போடி தாலுகா நிருபர்