எடை தராசுடன் ப்ளூடூத் இணைத்து சரியான எடையில் ரேசன் பொருட்கள் வழங்க பயிற்சி
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் வளாகத்தில் 17/06/2025 அன்று “எடை தராசு விற்பனை முனை எந்திரம் ப்ளூடூத்” மூலம் இணைத்து சரியான முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்குவது குறித்து துறையூர் கூட்டுறவு சங்க சார்பதிவாளர் திவ்யா, உப்பிலியபுரம் கூட்டுறவு சங்க சார்பதிவாளர் ம. தர்மராஜ் ஆகியோர் நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.இதில் வருவாய் ஆய்வாளர் லட்சுமணன் மற்றும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.
வெ நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்