மதுரையில் 32 புதிய வழித்தடங்களில் மினி பஸ் சேவை, அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல்தியாகராஜன் துவக்கி வைத்தனர்.
32 புதிய வழித்தடங் களில் மினி பஸ் சேவையை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் பஸ்வசதி கிடைக்கபெறாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய விரிவான மினிபஸ் திட்டம் சேவையினை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் 32 மினி பஸ் வழித்தடங்களின் தொடக்க விழா ஆயுதப் படை மைதானத்தில்நடந்தது.
இதில் கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார். அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் 32 மினிபஸ் வழித் தடங்களை தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து அமைச்சர்கள் கூறும் போது, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட குக்கிராமங்களை நகரப் பகுதி களுடன் இணைக்கும் விதமாக . புதிய விரிவான மினி பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்ச வழித் தட தூரத்தினை 25 கி.மீ. ஆக உயர்த்தி வழித்தட நீட்டிப்பு செய்து, அதில் பஸ் இயங்காத வழித்தடங்களில் குறைந்தபட் சம் 65 சதவீதம் இயக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி மினிபஸ் கள், பஸ் நிறுத்தங்கள், பஸ் நிலையங்களில் இருந்து புறப் படவும், நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது மினி பஸ்சை இயக்குபவர்கள் புதிய திட்டத் திற்கு மாற்றம் பெற்று இயக் கிடவும் வழிவகை செய்யப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2,094 புதிய வழித்தடங்கள் மற்றும் புதிய திட்டத்திற்கு மாறுதல் செய் | யப்பட்ட 1,009 வழித்தடங்கள் என மொத்தம் 3,103 வழித்த டங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.