மதுரையில் பாலம் பணிக்காக கால்வாய் அடைப்பு-அரசு பள்ளி வளாகத்தில் குளம்போல் கழிவுநீர் தேங்கியதால் மாணவர்கள் பரிதவிப்பு…..
மதுரையில் பாலம் கட்டும் பணிக்காக கால்வாய் அடைக்கப் பட்டதால், அரசு பள்ளி வளாகத்தில் கழிவுநீர் புகுந்து குளம்போல் தேங்கி நின்றது. இதனால் சமுதாயக்கூடத் தில் மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நடந்தன.
மதுரை சிந்தாமணி பகுதியில் கீழத்தெரு, புதுத்தெரு, நடுத்தெரு பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் செல்லும் கிருதுமால் நதி கால்வாயை கடப்பதற்காக ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் திருப்பரங்குன்றம் ஊராட்சிஒன் றிய நடுநிலைப்பள்ளியும் செயல் பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
கிருதுமால் நதி கால்வாயில் பாலம் கட்டுமான பணி நடப்ப தால் அவ்வழியே செல்லும் கழிவு நீரை தடுப்புகள் மூலம் அடைத்து பணிகளை துவக்கினர்.
கழிவுநீர் பாதை அடைக்கப் பட்டதால் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்து பள்ளியை சூழ்ந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கடந்த 14-ந்தேதி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை. காலை வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது பள்ளியை சுற்றி கழிவு நீரானது குளம்போல் தேங்கி நின்றதால் மாணவர்களால் வகுப்பறைக்குள் செல்ல முடிய வில்லை.
இதனால் பள்ளி மாண வர்கள் செய்வதறியாது சாலை யில் நின்று கொண்டிருந்தனர்.
இதைபார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள கோவில் முன்பாக மாணவர் களை சாலையில் அமர வைத்த தாக கூறப்படுகிறது. மாற்று இடம் கூட இல்லாமல் பள்ளிமாணவர்களை சாலையில் உட்கார வைக் கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.