தமிழக துணை முதல்வர் பெரிய குளத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியில் ஆய்வு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டம் பெரியகுளம் பிற் படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்

பெரியகுளம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிக்கு சென்ற தமிழக துணை முதல்வர் மாணவர்களிடம் அவர்களின் சொந்த ஊர் பெற்றோர் உதிக்கும் அவர்கள் பயின்று வரும் வகுப்புகள் குறித்தும் கேட்டறிந்தார் படிப்போடு விளையாடுவதிலும் உள்ள ஆர்வம் குறித்தும் விளையாட்டால் ஏற்படும் நன்மை குறித்தும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

விடுதியில் தங்கி உள்ள மாணவர்களின் விபர பதிவேட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார் உணவுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறையில் அரிசி பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தார்.

மேலும் மாணவர்கள் படிப்பதற்காக வாங்கப்படும் தினசரி நாளிதழ்களை பார்வையிட்டு மாணவர்கள் நாளிதழ்களை வாசிப்பதை ஊக்கப்படுத்த விடுதிக் காப்பாளர்களுக்கு அறிவு றுத்தினார்

மேலும் விடுதியில் சிசிடிவி மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர் விடுதியில் சமையல் கூடத்தில் உணவு தயாரிக்க உள்ள வசதிகளை பார்வையிட்டு மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியாளர்களிடம் மாணவர்களுக்கு விருப்பமான உணவு குறித்து கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜ. பெரியசாமி தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் என் ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி மகராஜன் பெரியகுளம் கே.எஸ்.சரவணக்குமார் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் உள்பட பலர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *