செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள காட்டுகரணை ஊராட்சியில்
எலப்பாக்கம் புனித தோமையார் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
புனித தோமையார் மருத்துவமனை மாதாகோவில் மற்றும் இமாகுலேட் அருட் சகோதரிகள் மக்களை தேடி மருத்துவ குழுவினர் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாமில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு உடல் எடை பரிசோதனை கண் சிகிச்சை முகாம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு இலவச மருந்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வட்டார மருத்துவர் சுரேஷ் மருத்துவர் காயத்ரி
கலந்து கொண்டனர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் தர்மராஜ் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அண்ணாமலை செல்வராஜ் மக்களை தேடி மருத்துவர்கள் செங்கேணி அம்மாள் சங்கீதா பவுனத்தாள் இமாகுலேட் சகோதரிகள் ரூரல் டிரஸ்ட் தலைவர் டோமினிக் முக்கிய பங்கு எடுத்து மருத்துவ முகாமை நடத்தினர்.
இம்மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று பயன் பெற்றனர்.
முகாம் நிறைவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.