ஈரோடு மாவட்டம், அந்தியூர் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள செல்லீஸ்வரர் வகையறா கோவில் ஆய்வாளர் அலுவலகம் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
பத்ரகாளியம்மன் கோவில் பின்புறம் ஈஸ்வரர் கோவில் அருகே கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏஜி வெங்கடாசலம், ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். அப்போது, பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிச்சாமி,கோவில் ஆய்வாளர் சிவமணி, செயலர் செந்தில் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.