தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டம் தென்காசியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் முன்னிலையில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் தொகுதி பொறுப்பாளர் கே கே எஸ் ஆர் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டமன்ற மண்டல பொறுப்பாளரும் கழக பொதுச் செயலாளருமான கனிமொழி செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மற்றும் கருத்துகளை கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு
ராணி ஸ்ரீகுமார், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கணேஷ் ஆதித்தன், தென்காசி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்
கலை கதிரவன்,கடையநல்லூர் பொறுப்பாளர் வழக்கறிஞர் நவ்ஷாத்
ஒன்றிய செயலாளர்கள் வல்லம் எம் திவான் ஒலி ரவிசங்கர் சுரேஷ் நகர செயலாளர் சாதீர் வெங்கடேசன் ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து பொறுப்பாளர்களும் செயற்குழு உறுப்பினர்களும் பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி அளித்த மனுவில் தென்காசி தொகுதியின் அடையாளமாக உள்ள தென்காசி மேம்பாலத்திற்கு முன்னால் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக அரசின் திமுக கொறடாவுமாக இருந்து மறைந்த காமு கதிரவன் அவர்களின் பெயரை மேம்பாலத்திற்கு வைக்க வேண்டும் என்றும் அவரின் திருவுருவச் சிலை தென்காசி மேம்பாலத்திற்கு முன்பாக அமையப் பெற வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர் இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்