கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் யோகா தின விழா
போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
யோகா கலை குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஜூன் 21 ஆம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது இந்நிலையில் கோவை மாவட்டம், கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் உலக யோகா தின விழா நடைபெற்றது..
முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக காவல் துறை உதவி ஆணையர் குமார்,குனியமுத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்..
நிகழ்ச்சியில்,ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து 20 க்கும் மேற்பட்ட ஆசனங்களை 40 நிமிடங்கள் இடைவிடாது செய்து அசத்தினர் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் மூன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்…
இதில், பங்கேற்ற மாணவ மாணவியர்கள் பாத ஹஸ்தா சனம், உட்கட்டா சனம், திருகோண ஆசனம், புஜங்கா சனம், பாலாசனம், உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட ஆசனங்களை இடைவிடாமல் செய்தனர் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வித்யாஸ்ரம் மழலை பள்ளி மாணவர்கள் பசுமை தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை வழங்கினர்…
நிகழ்ச்சியில் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி செயலர் ரவிக்குமார்,நிர்வாகி உதயேந்திரன்,முதல்வர் சரண்யா,வித்யாஸ்ரம் பள்ளி நிர்வாக இயக்குனர் சவுந்தர்யா,உட்பட பலர் கலந்து கொண்டனர்..