மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
தென்காசி ஜூன் 21
தென்காசி மாவட்டம்
கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி சர்ச் அபாய அளவில் தென்காசியில் இருந்து மதுரைநோக்கி அரசுப் பேருந்து ஒன்று மாலையில் சென்றுகொண்டு இருந்தது. பேருந்தை மதுரையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஓட்டிச் சென்றார். பேருந்தில் 57- பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
சிராஜ் மில்லத் அறக்கட்டளை சொந்தமான ஆம்புலன்ஸை கடையநல்லூர் ரைஸ் மில் தெரு வசித்து வரும் காஜாமைதீன் மகன் முஹம்மது காலித்(35) புளியங்குடியில் இருந்து கடையநல்லூரை நோக்கி ஓட்டி வந்துள்ளார்
ஆம்புலன்ஸ் சொக்கம்பட்டி சர்ச் அபாயா வளைவில் மதுரை – தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரியை ஆம்புலன்ஸ் முந்தி சென்றதாக கூறப்படுகிறது அப்பொழுது தென்காசியில் இருந்து மதுரையை நோக்கி வந்த அரசு பேருந்து மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேராக ஆம்புலன்ஸ் திடீரென மோதி பேருந்தில் உட்புகுந்து நின்றது..
இது குறித்து சொக்கம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பஸ் பயணிகள் , மோதிய ஆம்புலன்ஸ் உள்ளே சிக்கிக் கொண்ட டிரைவர் முஹம்மது காலித் மற்றும் உதவியாளர் மன்சூர் ஆகியோர் ஜேசிபி எந்திரத்தின் மூலம் இருவரையும் மீட்டு வேறு ஒரு ஆம்புலன்ஸில் மூலம் கடையநல்லூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அங்கே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு டிரைவர் முகம்மது காலித்தை மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆம்புலன்ஸ் உதவியாளர் மன்சூர் லேசான காயத்துடன் இருந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்
இந்த விபத்து குறித்து சொக்கம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மாலை நேரம் என்பதால் போக்குவரத்து மிகுந்த மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது குறிப்பிடத்தக்கது